உசிலம்பட்டி: தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அலுவலக ஊழியர்கள்..!

உசிலம்பட்டி: தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அலுவலக ஊழியர்கள்..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கணக்காளராக பணியாற்றும் கருப்பையா என்ற அரசு ஊழியரை,  கே.போத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உக்கிரபாண்டி என்பவர் தாக்கிய சம்பவம் தொடர்பாக உக்கிரபாண்டி உட்பட 7 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு ஊழியர் மீது தாக்குதல் நடத்திய அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் உக்கிரபாண்டியை குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும், அவரை தகுதி நீக்கம் செய்யக்கோரியும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், கூடுதல் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், அலுவலக ஊழியர்கள் மதுரை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் மற்றும் 12 அரசு ஊழியர் சங்கங்கள் என சுமார் 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஒன்றினைந்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊராட்சி மன்ற தலைவரை குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுதி நீக்கம் செய்யும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.