இனி தப்பு செய்வதற்கு எந்தவொரு மனிதனும் அஞ்சனும்...தண்டனை அப்படி கடுமையாக வேண்டும்! சரத்குமார்

இனி தப்பு செய்வதற்கு எந்தவொரு மனிதனும் அஞ்சனும்...தண்டனை அப்படி கடுமையாக வேண்டும்! சரத்குமார்
Published on
Updated on
1 min read

சமூக விரோதிகளால் VAO லூர்து பிரான்சிஸ் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த வருத்தம் அளிப்பதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் சரத்குமார் அறிக்கை வெளியிட்டார்.


தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாட்டில் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் மணல் கடத்தும் கும்பலால் நேற்றைய தினம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த சம்பவம் மிகுந்த வருத்தமளிப்பதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் சரத்குமார் அறிக்கை வெளியிட்டார்.

அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,   கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாகவும், நேர்மையான அதிகாரிகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை எனவும், தனது பணியை முறையாக செய்த அதிகாரியை கொலை செய்து, சமூக விரோதச் செயலில் ஈடுபட்ட குற்றவாளியின் கரங்கள் ஓங்குவதை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை காலதாமதமின்றி, அதிவிரைவாக  கண்டறிந்து, சிறையில் அடைப்பதுடன்  கடுமையான தண்டனையும் பெற்றுத் தருவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும், இந்த சம்பவம் மற்ற நேர்மையான அதிகாரிகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் நிலைக்கு தள்ளக்கூடாது எனவும்,  மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் அரசு அதிகாரிகள் பலரின் விருப்பு, வெறுப்புகளை கடந்து தங்கள் பணிகளை செவ்வனே மேற்கொள்வதற்கு அரசாங்கம் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
அதேசமயம், இனி கொலை குற்றச் செயலில் ஈடுபடுவதற்கே எந்தவொரு மனிதனும் அஞ்சும் வகையில் தண்டனை கடுமையானதாக இருக்க வேண்டும் என்பதையும் தனது அறிக்கையின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com