
வடிவேலு படபாணியில் பூங்காவைக் காணவில்லை என வடசென்னை அருகே ஒருவர் புகாரளித்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.
திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு, என் கிணற்றை காணும் சார் என்று போலீசில் புகார் அளிப்பார். அதேபோல் சென்னை ஆர்.கே.நகர் காவல்நிலையத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பூங்காவை மீட்டுத்தரக்கோரி ஆர்டிஐ செல்வம் என்பவர் பட பாணியில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரில், 1993 ஆம் ஆண்டில் கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரில் கழிப்பறையும், பொழுதுபோக்குப் பூங்காவும் கட்டித் தரப்பட்டதாக கூறியுள்ள அவர், தற்போது பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டு பூங்கா ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். எனவே, ஆக்கிரமிக்கப்பட்ட பூங்காவை மீட்டுத் தருமாறு புகாரில் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஏற்கனவே பூங்கா வரைபட ஆதாரத்துடன் புகாரளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.