"திராவிடத்தை அழிக்க ஹிட்லர் போல் செயல்படுகிறார் மோடி" வைகோ குற்றச்சாட்டு!!

திராவிடக் கொள்கையை அழிக்க ஹிட்லர் போல் மோடி செயல்படுகிறார் என மதிமுக பொது செயலாளர் வைகோ குற்றச்சாட்டியுள்ளார்.

மதுரை வளையங்குளத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ, "சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் மதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு 15ம் தேதி மிக பிரமாண்டமான அளவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு புதிய எழுச்சியை மதிமுகவிற்கு தரப்போகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் பேசிய அவர், நாட்டில் கொலை, கொள்ளை,கற்பழிப்பு நடைபெறும் வேளையில், அதை தடுக்க தவறிய மத்திய அரசு திராவிட கொள்கையை அழிக்க வேண்டும் என துடிக்கிறது என சாடிய அவர், இந்த விஷயத்தில் பிரதமர் மோடி ஹிட்லர் போல செயல்படுகிறார் எனவும் விமர்சித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், "தற்போது அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்துள்ளோம். இந்தியா என்பது நாட்டின் பெயராக நான் கருதவில்லை. இந்தியா என்ற நாடு 300 ஆண்டுக்கு முன் கிடையாது. இந்தியா என்ற அமைப்பை உருவாக்கியவர்கள் வெள்ளையர்கள் .ஆனால் அதில் பர்மாவும் , வங்கதேசமும் இருந்தது. தற்போது அமைக்கப்பட்ட கூட்டணி உண்மையான இந்தியாவாக இருக்கும். தமிழக முதல்வரின் செயல்பாடுகளை இந்தியாவே உற்று நோக்குகிறது" என தெரிவித்துள்ளார்.

இந்தியாவை பாரத் என்று பெயர் மாற்றம் செய்யப் போவது குறித்த கேள்விக்கு, பாரத் என்ற சொல் எங்கிருந்து வந்தது? சனாதன தர்மத்திற்கு தான் பாரத் என்று பெயர் வைத்துள்ளது என பதிலளித்த அவர், தொடர்ந்து பாராளுமன்ற ஊழியர்களுக்கு தாமரைச்சின்னம் ஒழிக்க சீருடை வழங்கப்பட்டது குறித்த கேள்விக்கு, பாராளுமன்ற ஊழியர்களுக்கு தாமரை சின்னம் சீருடை வழங்கியது அயோக்கியத்தனம் எனவும் விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு விஸ்கர விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் அமல்படுத்த முயற்சிப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த வைக்கோ "விஸ்வகர்மா யோஜனா திட்டம் என்பது பழைய திட்டம் தான் கட்டிடத் தொழிலாளி மகன் கட்டிடத் தொழில் தான் செய்ய வேண்டும் முடி திருத்துபவர் மகன் முறை திருத்தம் தான் செய்ய வேண்டும் என்பது போன்ற திட்டம் தான். அதை தான் தற்போது பாஜக  செயல்படுத்த நினைக்கிறது" எனக் கூறியுள்ளார்.
 
இதையும் படிக்க || இலங்கை கடற்படை அட்டூழியம்... தமிழ்நாட்டு மீனவர்கள் 17 பேர் கைது!!