பா.ஜ.க. அரசின் அடக்குமுறைக்கு ஸ்டேன் சுவாமி பலி... வைகோ குற்றச்சாட்டு...
பா.ஜ.க. அரசின் அடக்குமுறைக்கு ஸ்டேன் சுவாமி பலியாகிவிட்டதாக வைகோ குற்றம் சுமத்தியுள்ளார்.

அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் 2 கோடியே 17 லட்சம் பேருக்கு மாதம் ஆயிரத்து 500 மற்றும் 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கி இருப்போம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள வெள்ளாங்காட்டு பாளையத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலை கடையை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
பின்னர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சிரைப்புரை ஆற்றியபோது:-
அதிமுக ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் முழு நேரம் சிகிச்சை அளிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளபட்டது எனவும், தற்போது 4 மணி நேரம் தான் மருத்துவர்கள் இருக்கும் நிலை உள்ளது,
முழு நேர மருத்துவர்கள் வேண்டும். ர்ன்ச்வும் குறிப்பிட்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2100 இடங்களில் அம்மா கிளினிக்கை கொண்டுவந்தார். இது அனைத்து பகுதிகளிலும் இன்று மூடப்பட்டுள்ளது. இல்லம் தேடி மருத்துவத்தில் மக்கள் கேட்கின்ற மருந்துகளை மட்டுமே தருவார்களே தவிர உடலில் என்ன குறை இருக்கின்றது என்பதை ஆராய முடியாது.
ஒரு மருத்துவர்,ஒரு செவிலியர் மற்றும் அதற்கான பணியாளர்கள் இருக்கின்ற போது தான் உடலில் உள்ள நோய்களை கண்டறிந்து அதற்கு எந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம் என்று சிகிச்சை அளிக்க முடியும் எனக் கூறினார்.
அதோடு, மருத்துவர்கள் இல்லாமல் மக்கள் மருந்துகளை வாங்கும் போது, அது தேவைக்கு அதிகமாக இருக்கலாம் அல்லது கூடுதலாக மருந்துகள் தேவைப்படலாம், எந்த நோய்க்கு எந்த மருந்துகளை கொடுக்க வேண்டும் என்பதை பணியாளர்களால் பரிசோதித்து வழங்க முடியாத நிலை உள்ளது”, எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒரு திட்டம் கொண்டு வரும் போது அதில் நன்மை இருக்கின்றதா என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். மகளிர் உரிமைத் தொகை 1000 பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்படாதவர்கள் வருத்தத்தோடு இருக்கிறார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் 2 கோடியே 17 லட்சம் பேருக்கு மாதம் 1500 மற்றும் 6 சிலிண்டர்கள் இலவசமாக நிச்சயமாக வழங்கி இருப்போம்”, என தெரிவித்தார்.
“கர்நாடக தேர்தலில் 2000 ரூபாய் கொடுப்பேன் என்று சொல்லிய வாக்குறுதியை இரண்டே மாதங்களில் நிறைவேற்றப்பட்டது,ஆனால் திமுக இரண்டு ஆண்டு காலம் முடிந்து, தேர்தல் வரவிருப்பதால் கருணை உள்ளத்தோடு முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை 1000 வழங்கி உள்ளார்”, என சாடினார்.
இதையும் படிக்க | 2023-24 ஆண்டில் ரூ.1,027 கோடி வரி வசூல்..! சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை மாநகராட்சியில் 2023-24 நிதியாண்டுக்கான முதல் அரையாண்டில் 1,027 கோடி ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிர்வாக ரீதியாக 15 மண்டலங்களும் 200 வார்டுகளும் உள்ளது. இவற்றில், மாநகராட்சிக்கான நிதி ஆதாரமாக பொதுமக்களிடம் இருந்து சொத்து வரி மற்றும் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் 2023-24 நிதியாண்டுக்கான முதல் அரையாண்டில் சொத்து வரி 770 கோடியும் தொழில் வரி 257 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
சொத்து வரி மற்றும் தொழில் வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளவர்கள் விரைந்து செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. கால அவகாசம் முடிந்தும் வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களுக்கு 2% அபராதம் விதிக்கப்படும் எனவும் நீண்டகாலமாக செலுத்தாதவர்களின் சொத்துக்கள் சீல் வைக்கப்படும் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீண்ட காலமாக வரி செலுத்தாமல் 5 லட்சம் ரூபாய்க்கும் மேல் நிலுவை வைத்துள்ளவர்களின் பட்டியலையும் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மருத்துவ ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் - மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!
முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ -விற்கு வித்தியாசமான ஒரு தீர்ப்பினை சென்னை உயர் நீதி மன்றம் வழங்கியுள்ளது.
கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் உள்ள மந்தைவெளி பகுதியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும் அமைச்சர் உதயநிதி பற்றியும் அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு அவதூராக பேசியதாக அவர் மீது அன்று நள்ளிரவே 4 பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
அதன் பிறகு வாய் தவறி ஒரு வார்த்தையை சொல்லி விட்டேன் என்றும் பிறர் மனம் புன்படும் வகையில் நான் பேசிய வார்த்தைக்கு மன்னிப்பு தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு தெரிவித்திருந்தார்...
இதனையடுத்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தான் ஏற்கனவே வருத்தம் தெரிவித்துவிட்டதாகவும் அரசியல் உள் நோக்கத்தோடு தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கானது நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரனைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பின்பு... காவல் துறையிடம் அனுமதி பெற்று ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி குறித்து தான் பேசிய கருத்திற்கு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குமரகுரு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அவதூறு வழக்கில் ஒரு எம்.பி தகுதிநீக்கம் செய்ய்ப்பட்டுவதாக வெளியான தீர்ப்புகளுக்கு மத்தியில் மன்னிப்பு கேட்பதற்காக தனியொரு பொதுக்கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | தமிழ்நாடு அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு ..!
தமிழ்நாட்டிற்கு 11 மருத்துவ கல்லூரிகளை கொடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 6 முறை ஆட்சியில் இருந்த திமுகவினர், 5 மருத்துவ கல்லூரிகளை மட்டுமே திறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டதாவது:-
“தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவக்கல்லூரிகளை வழங்கியவர் நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் என்பதை தமிழக முதல்வர் நினைவுக்கூர விரும்புகிறோம். கடந்த ஆண்டு, திமுக எம்பி டிஆர் பாலு, தமிழகம் 11 மருத்துவக் கல்லூரிகளை “வெள்ளித் தட்டில்” பெற்றதாகக் கூடக் கூச்சலிட்டார். தி.மு.க.ஆட்சியில் 6-வது முறையாக இருந்தும், வெறும் 5 அரசு மருத்துவக் கல்லூரிகளை மட்டுமே திறந்துள்ளது. இது உங்கள் மரபு, தயவு செய்து முதலைக் கண்ணீர் சிந்துவதை நிறுத்துங்கள்”, என சாடியுள்ளார்.
மேலும், சந்தேகத்திற்கு இடமின்றி, தமிழ்நாட்டில் சிறந்த சுகாதார உள்கட்டமைப்பு உள்ளது. ஆனால் இந்த வெற்றிக்கு தி.மு.க. பங்களிப்பு மிகக் குறைவு எனவும், தமிழக முதல்வர் அவர்களின் ஒரே பங்களிப்பு சமீபத்தில் திமுக அமைச்சர் எ.வ.வேலுவின் தனியார் மருத்துவ கல்லூரி திறப்பு விழா தான் எனவும் விமர்சித்டுள்ளார்.
தமிழக முதல்வரின் இந்த மிகைப்படுத்தப்பட்ட அறிக்கை மற்ற திமுக அமைச்சர்களும் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்ட திட்டமிட்டு உள்ளார்களா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது எனவும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு மாநில அரசு தனது கடந்த கால பெருமைகளை பற்றி பேசுவதை விட்டுவிட்டு, சென்னையை தாண்டி சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்”, என பாஜக தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிக்க |
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமன்னூரை சேர்ந்த சுமதி என்ற பெண்ணின் கருப்பையில், குழந்தை இறந்து பிறந்ததாகக் கூறி அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவர்களின் கவனக் குறைவால் குழந்தை இறந்ததாகக் கூறி சுமதி அளித்த புகார் மீதான விசாரணையின்போது, சுமதி மற்றும் குழந்தையின் மருத்துவ அறிக்கைகள் அரசு தரப்பில் தாக்கல் செய்யப் படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க : தமிழ்நாட்டிற்கு 11 மருத்துவ கல்லூரிகளை கொடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி! - அண்ணாமலை
இதனையடுத்து, மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை குறித்த ஆவணங்களை பராமரிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 3 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.