இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த திமுக தொண்டனுக்கு வைகோ இரங்கல்...

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த திமுக தொண்டனுக்கு வைகோ இரங்கல்...

சேலம் மாவட்டம், நங்கவள்ளி பகுதியில் உள்ள தாழையூர் கிராமத்தைச் சேர்ந்த திமுக விவசாய அணியின் முன்னாள் ஒன்றியப் பொறுப்பாளரான தங்கவேல் என்பவர் ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை தாள முடியாமல் நேற்று காலையில் தி.மு.கழக அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளித்து மாண்டார் என்ற செய்தி கேட்டு பெரிதும் அதிர்ச்சியும் ஆராத் துயரமும் கொண்டேன் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிந்துகொள்ள | இந்தி எதிர்ப்பு....! அன்று முதல் இன்று வரை!! நீளும் மொழிப்போர் தியாகிகள் பட்டியல்!

இந்தி ஆதிக்கத்தினை எதிர்த்து கீழப்பழுவூர் சின்னச்சாமியை பற்றி உயிர் குடித்த தீ, இன்று தங்கவேல் அவர்களின் உயிரையும் பறித்தெடுத்த கொடுமையை எவ்வாறு தாங்கிக்கொள்வது, ஒன்றிய பா.ஜ.க. அரசு இவைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து நடக்குமா? இந்தித் திணிப்பை, சமஸ்கிருத மொழி திணிப்பை நாள்தோறும் செய்து வருவதை நிறுத்திக்கொள்ளுமா? என்ற உணர்வு தமிழ் மக்களின் நெஞ்சில் தணலாய் கொதித்து எழுகிறது.

அன்னைத் தமிழ் மொழியைக் காப்பதற்காக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தி, சமஸ்கிருத மொழிகளின் வல்லாதிக்கத்தை நிறுத்துவதற்காக தீக்குளித்து தன் மூச்சை நிறுத்திக்கொண்ட அந்தத் தியாக மறவன் தங்கவேல் அவர்களுக்கு என் வீர வணக்கத்தை தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.கழக தலைவருமான மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் “ஏற்கனவே ஏராளமான தீரர்களை நாம் இழந்துவிட்டோம். இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக் கூடாது. போராட்ட வடிவமாக இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்” என்று மனம் நெகிழ்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையை நான் வழிமொழிகிறேன்.

100 Best HBD Vaiko Images, Videos - 2022 -           </div>

          <!--Optional Url Button -->
          
          <!--Optional Url Button -->
          
          
          <!--div class= <--?php if (!empty($post_tags)): ?>

<--?php echo trans("post_tags"); ?>

<--?php endif; ?>

தமிழ்நாட்டில் தேர்தல் எதுவும் இல்லை என்பதால் ஜனாதிபதி உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டவில்லை. இடிப்பாரை இல்லாத எமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் எனும் திருக்குறளை மேற்கோள் கட்டி கனிமொழி மக்களவையில் பேசினார்.

மேலும் படிக்க| தீயில் தள்ளி தான் பெண்களுக்கு பெருமை சேர்க்கப்போகிறீர்களா? – மக்களவையில் கனிமொழி எம்.பி பேச்சு

அதற்கு ஆங்கிலத்தில் பொழிபெயர்பு செய்தார், ஏனென்றால் தென்னிந்திய மொழிகள் எதுவும் உங்களுக்கு தெரியாது, ஆனால் ஹிந்தி மொழியை மட்டும் திணிக்கிறீர்கள்

திமுக எம்.பி கனிமொழி


திமுக எம்.பி கனிமொழி மக்களவையில் உரையாற்றிய போது பேசிய அவர், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்னவானது? தீயில் தள்ளி தான் பெண்களுக்கு பெருமை சேர்க்கப்போகிறீர்களா?

மேலும் படிக்க| கொத்தடிகளாக இருந்த வடமாநில சிறுவர்கள் 24 பேர் சென்னையில் மீட்பு

இந்த அரசு ஆட்சிக்கு வந்து 27 முறை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்துள்ளது; தேர்தல் வாக்குறுதியிலும் சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் அந்த மசோதா இதுவரை நிறைவேற்றப்படவில்லை, அதற்காக நீங்கள் ஒன்றும் செய்யவில்லை; நீங்கள் மக்களுக்காகவோ, நலிவடைந்தவர்களுக்காகவோ , ஒடுக்கப்பட்டவர்களுக்காகவோ கவலைப்படவில்லை

சென்னை சவுகார்பேட்டை பகுதிகளில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த 24 வட மாநில சிறுவர்களை அரசு அதிகாரிகள் மீட்டுள்ளனர்ஐந்தாயிரம் ரூபாய் மட்டும் கொடுத்து 12 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளதுதங்கப்பட்டறை, வெள்ளி பட்டறை உள்ளிட்ட சிறு தொழில் பகுதிகளில் இருந்து குழந்தை தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்

தொழிலாளர் நலத்துறை குழந்தைகள் நலம், காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையில் சிறுவர்கள் மீட்பு


தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்காக ஆயிரக்கணக்கானோர் வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த விவகாரம் மிகப்பெரிய பேசுபொருளாக இருந்து வரும் நிலையில், கொத்தடிமைகளாகவும் குழந்தை தொழிலாளர்களாகவும் சட்டவிரோதமாக குழந்தைகள் பணியமர்த்தப்படுவது தொடர்கதை ஆகவே இருந்து வருகிறது. குறிப்பாக வட மாநிலத்திலிருந்து தரகர்கள் மூலம் அழைத்து வரப்பட்டு சிறு சிறு தொழில்களுக்கு பணியமர்த்தப்பட்டு கொத்தடிமைகளாக சிறுவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இதனை தடுக்கும் வண்ணம் தமிழக அரசு தொழிலாளர் நலத்துறை, காவல்துறை, சமூக ஆர்வலர்கள், குழந்தைகள் நல துறை உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்து அதிரடி சோதனை மேற்கொள்வார்கள். அந்த அடிப்படையில் சென்னை சவுகார்பாட்டை பகுதியில் தங்க பட்டறைகள், வெள்ளி பட்டறைகள் ஆகிய இடங்களில் 18 வயது மற்றும் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டது அறிந்து சோதனை மேற்கொண்டனர்.
அதில் 24 வட மாநில சிறுவர்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.  அருகிலுள்ள சமூக நல கூடம் ஒன்றில் மீட்கப்பட்ட சிறுவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்த திறனற்ற திமுக அரசு

முதற்கட்ட விசாரணையில் 5000 ரூபாய் பணத்தை பெற்றோர்களுக்கு கொடுத்துவிட்டு சிறுவர்கள் அளித்துவரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஓய்வின்றி 12
மணி நேரத்திற்கு மேலாக வேலை வாங்கப்படுவதும் சம்பளம் ஏதும் கொடுக்காமல் உணவு மட்டும் கொடுத்து வேலை வாங்குவதும் சிறுவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

குழந்தை தொழிலாளர் நலச் சட்டத்தின் அடிப்படையில் 14 வயதுக்கு கீழ் உள்ளவர்களை பணியமர்த்தக் கூடாது என்ற சட்டத்தை மீறி செயல்படுவதோடு மட்டுமல்லாது, 14 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆபத்தான தொழிலில் பயன்படுத்தக் கூடாது என்ற விதிகளையும் மீறி சவுகார்பேட்டையில் குழந்தை தொழிலாளர்கள் கொத்தடிமைகள் போல் பயன்படுத்தப்படுவது  தெரியவந்துள்ளது

இதுபோன்று விதிகளை மீறி குழந்தை தொழிலாளர்கள் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவதாகவும் பெற்றோர்களுக்கு தெரிந்தே இரண்டாவது முறை குழந்தைகள் கொத்தடிமைகளாக அனுப்பப்பட்டால் பெற்றோர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆறு மாதத்தில் இதே போன்ற நடத்தப்பட்ட சோதனையில் 38 வட மாநில குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இனிவரும் காலங்களில் தொடர் சோதனை நடைபெறும் எனவும் அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பருவம் தவறி பெய்த மழையினால் காவிரி டெல்டா பகுதியில் அறுவடைக்காக காத்திருந்த நெல் பயிரையும் அறுவடை செய்யப்பட்டு ஈரப்பதம் அதிகம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய, விவசாய பெருங்குடி மக்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று வெள்ள சேதங்களையும் அறுவடை செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பதத்தையும் ஆய்வு செய்ய மத்திய அரசின் குழு நாளை தமிழகம் வரவுள்ளது. 

மத்திய அரசின் நெல் கொள்முதல் ஈரப்பத வரைமுறையின்படி நெல் ஈரப்பதம் 17 சதவீதத்திற்கு கீழே இருக்கவேண்டும் என்பதாகும். ஆனால் தற்போது பெய்த கனமழையினால் ஈரப்பதம் 22 சதவீதத்திற்கு மேல் இருக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டுமென்ற விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கைக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி துணை நிற்கும். 

மேலும்  படிக்க| கல்யாணம் செய்வதாக கூறி ஆபாச வீடியோ எடுத்து பணம் பார்த்த மாப்பிள்ளை!!!! கதறும் மணப்பெண்!!!!!

அதே வேலை, ஆளும் திறனற்ற திமுக அரசுக்கு சில கேள்விகளை முன் வைக்க கடமைபட்டுள்ளோம். 

ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் தமிழக நெல் விவசாயிகளுக்கு 52.02 கோடி செலவில் தார்பாய்கள் வழங்கப்படும் என்றார் திறனற்ற திமுக அரசின் வேளாண் துறை அமைச்சர் திரு எம்.ஆர்.கே.  பன்னீர்செல்வம் அவர்கள். கொடுத்தார்களா? 

2022-23 ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் 5 கோடி ரூபாய் செலவில் 60,000 விவசாயிகளுக்கு தார்பாய்கள் வழங்கப்படும் என்று அறிவித்தனர். கொடுத்தார்களா? 36 கோடி ரூபாய் செலவில் ஆறு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு கிடங்குகள், உலர்தளங்கள் போன்ற கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும் என்று வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருந்தார்கள். செய்தார்களா? 

தேர்தல் வாக்குறுதியில் நெல் ஒரு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 2500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள். நிறைவேற்றினார்களா? 

தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்தபின்னர் கொடுத்த வாக்குறுதிகள் என  எதையும்  நிறைவேற்றாமல் விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது இந்த திறனற்ற திமுக அரசு. 

மேலும் தற்போது இயங்கிவரும் நெல் சேமிப்பு கிடங்குகள் குறித்தும் பெருவாரியான விவசாய பெருங்குடி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. அதற்கும் இந்த அரசு எந்த வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. 

போதிய உலர்தளங்கள் இல்லாததால் பெருவாரியான விவசாயிகள் சாலையில் நெல்லை உலர வைப்பது இன்று வரை தொடர்ந்து வருகிறது. 

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அலட்சிய போக்குடன் செயல்படும் இந்த திறனற்ற திமுக அரசு இதற்கு மேலும் தாமதிக்காமல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறோம்.

நீதிபதியாக பதவியேற்கத் தகுதியற்றவர் விக்டோரியா கவுரி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி பொறுப்பேற்றுள்ளார். 

இதையும் படிக்க : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து பின்வாங்கிய அமமுக...வெளியானது அதிகாரப்பூர்வ அறிக்கை!

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற விக்டோரியா கவுரி தகுதியற்றவர் என்று விமர்சித்தார்.

தொடர்ந்து கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை அவதூறாக பேசிய விக்டோரியா கவுரியின் நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிர்கட்சிகள் சார்பில் கடிதம் எழுதியுள்ளதாகவும் வைகோ கூறியுள்ளார்.