மனதை உலுக்கும் மதுரை ரயில் விபத்து...இரங்கல் செய்தி வெளியிட்ட வைகோ!

மனதை உலுக்கும் மதுரை ரயில் விபத்து...இரங்கல் செய்தி வெளியிட்ட வைகோ!

Published on

மதுரையில் சுற்றுலா ரயில் பெட்டியில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். 

மதுரையில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இயற்கை மரணத்தையே தாங்கிக் கொள்ள முடியாத நமக்கு, தீ விபத்தில் சிக்கி பயணிகள் மரணம் அடைந்த கோர விபத்து மிகவும் கொடுமையானது என்று கூறியுள்ளார். 

படுகாயம் அடைந்த பயணிகளுக்கும், மூச்சுத் திணறல் காரணமாக பாதிக்கப்பட்ட பயணிகளுக்கும் சிறப்பான முறையில் சிகிச்சையளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ரயில் பெட்டிகளில் கேஸ் சிலிண்டர் போன்ற வெடி பொருட்களை எடுத்துச்  செல்வதை தடுத்து நிறுத்துவது ரயில்வே காவல்துறையினரின்  கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com