உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பதவி... வைகோ கண்டனம்...
உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களை மாநிலங்களின் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு நாள் பயணமாக வரும் 11 ஆம் தேதி தமிழகம் வரும் அமித் ஷா தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணையில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். அதைத்தொடர்ந்து வேலூரில் நடைபெறவுள்ள பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.
இதற்காக நாளை சென்னை வரும் அமித்ஷா, சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி நட்சத்திர விடுதியில் தங்கவுள்ளார். அங்கு அவரை சந்திக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டுள்ள நிலையில், ஓ பன்னீர் செல்வமும் நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : 12 ஆம் தேதி தண்ணீர் திறப்பு...தூர்வாரும் பணிகள் குறித்த குறும்படத்தை பார்வையிட்டார் முதலமைச்சர்!
முன்னதாக, கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி டெல்லியில் வைத்து எடப்பாடி பழனிசாமி, அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தமிழக பா.ஜ. க தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினர். அந்த சந்திப்பின்போது, நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசித்ததாகவும், பா.ஜ.க போட்டியிடவுள்ள தொகுதிகளை முன்கூட்டியே இறுதி செய்து தருவது தொடர்பாக ஆலோசித்ததாகவும் தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில் நாளை எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்திக்கும் போது பா.ஜ.கவுக்கான தொகுதிகள் குறித்தும், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தென்சென்னை, வேலூர், நாகர்கோவில், கோவை, நெல்லை, நீலகிரி, திருப்பூர், விருதுநகர், விழுப்புரம் ஆகிய 9 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகவும், அதை முன்வைத்தே தென்சென்னை மற்றும் வேலூருக்கு அமித்ஷா வரவுள்ளதாகவும் பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடியில் உள்ள முத்துவாரி வாய்க்கால் மற்றும் விண்ணமங்கலம் வாய்க்கால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக வரும் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைக்கவுள்ளார்.
இந்நிலையில், காவிரிப் பாசனப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக தஞ்சாவூர் சென்றுள்ளார். அங்குள்ள சுற்றுலா மாளிகைக்குச் சென்ற முதலமைச்சர் நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்த குறும்படத்தைப் பார்வையிட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதையும் படிக்க : விழுப்புரத்தை தொடர்ந்து கரூரிலும் கோவில் சீல் வைப்பு...அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடியில் உள்ள 3 புள்ளி 5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட முத்துவாரி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
பின்னர் விண்ணமங்கலம் வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வரும் துர்வாரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோவிலுக்கு சீல் வைத்த கோட்டாட்சியரின் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூரில் குளித்தலை அருகே உள்ள வீரணம்பட்டி காளியம்மன் கோயில் திருவிழாவில் அட்டவணைப் பிரிவு இளைஞரை சாமி தரிசனம் செய்யவிடாமல் தடுத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து வந்த கோட்டாட்சியரும், வட்டாட்சியரும் பட்டியலின இளைஞரை கோவிலுக்குள் விடுவதற்கு மறுக்கப்பட்ட விவகாரத்தில் கோவிலுக்கு சீல் வைத்தனர்.
இதனால் ஆவேசமடைந்த குறிப்பிட்ட சமூக பொதுமக்கள் தங்களது சொந்த செலவில் கோயிலை கட்டியுள்ளதாகவும், முறையாக விசாரிக்காமல் சீல் வைத்ததாகவும் கூறி கோட்டாட்சியரின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.
இதையும் படிக்க : ”5 ஆண்டுகள் மட்டும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்” அன்புமணி ராமதாஸ் பேச்சு!
பின்னர் போலீசார் குவிக்கப்பட்டு கோட்டாட்சியர் வாகனம் விடுவிக்கப்பட்ட நிலையில், கோட்டாட்சியரின் வாகனம் மோதி இளம்பெண் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து அந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள், அரசு அதிகாரிகள் முறையாக விசாரிக்காமல் ஒரு தலைபட்சமாக செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
முன்னதாக, இதேபோன்ற ஒரு சம்பவத்தால் விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி என்ற பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் சமிபத்தில் சீல் வைக்கப்பட்ட நிலையில், தற்போது கரூரிலும் கோவில் சீல் வைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுவிலக்கிற்காக போராடும் ஒரே கட்சி பாமக தான் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் கீழவீதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் 50 ஆயிரம் கோடி என்ற அளவில் உள்ள மது விற்பனையை அடுத்த மூன்று ஆண்டுகளில் 80 ஆயிரம் கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்க உள்ளதாகவும், முதல் கையெழுத்து பூரண மது விலக்கு என்று கூறிய ஸ்டாலின் இப்போது அதனை மறந்துவிட்டதாகவும் கூறினார். திமுகவின் வீழ்ச்சி என்பது மதுவிலக்கு அமைச்சரால் தான் ஏற்படும் என்றும் கூறினார்.
இதையும் படிக்க : தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு...தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை!
தொடர்ந்து பேசிய அவர், ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று அன்புமணி ராமதாஸ் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது.
ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழையில் தான் அதிக மழை பொழிவானது காணப்படுகிறது. அதுவும் இந்த மழையானது முதலில் கேரளாவில் இருந்து ஆரம்பமாகி தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா என அடுத்தடுத்து பிற மாநிலங்களிலும் பரவலாக காணப்படும்.
இதையும் படிக்க : ”நாடாளுமன்ற தோ்தலில் திமுகவை தவிர யாரும் வெற்றி பெறமுடியாது” - கனிமொழி
வழக்கமாக , கேரளாவில் தென்மேற்கு பருவமழை என்பது மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்கும். அதன்படி, இந்தாண்டு தென்மேற்கு பருவமழையானது கேரளாவில் ஜூன் 1 அல்லது 4 ஆம் தேதி துவங்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், ஜூன் 4 ஆம் தேதி துவங்கவில்லை.
தொடர்ந்து, தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மழை, வெள்ளத்திலிருந்து காத்துக் கொள்வதற்கான முன்னேற்பாடுகள் பற்றி தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது. இதில், வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை, காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.