வள்ளலார் பிறந்தநாள் விழா இனி தனிப்பெருங்கருணை நாளாக கடைபிடிக்கப்படும் - முதலமைச்சர்

வள்ளலாரின் பிறந்தநாள் இனி "தனிப்பெருங்கருணை நாளாக கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வள்ளலார் பிறந்தநாள் விழா இனி தனிப்பெருங்கருணை நாளாக கடைபிடிக்கப்படும் - முதலமைச்சர்

வள்ளலாரின் பிறந்தநாள் இனி "தனிப்பெருங்கருணை நாளாக கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளாரின் பிறந்த நாள்  அக்டோபர் 5-ம் தேதியான இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் இனி,  "தனிப்பெருங்கருணை நாளாக கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர்  அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்தவர்  என புகழாரம் சூட்டியுள்ளார். அனைத்து நம்பிக்கையிலும்  உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வகையில், சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவி, சத்திய ஞான சபையை எழுப்பினார் என்று குறிப்பிட்டுள்ளார்.   

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார், மக்களின் பசித்துயர் போக்க சத்திய தர்ம சாலையை நிறுவி, பசிப்பிணி நீக்கும் மருத்துவராக வாழ்ந்துகாட்டியுள்ளார் என்றும், அவர் அன்று ஏற்றி வைத்த அடுப்பு இன்றுவரை எரிந்து பசித்தவர்களின் வயிற்றை நிரப்பி வருகிறது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.