ஓணம் ஸ்பெஷல்: வண்டலூர் பூங்கா இன்று வழக்கம்போல் செயல்படும்...!

ஓணம் ஸ்பெஷல்: வண்டலூர் பூங்கா இன்று வழக்கம்போல் செயல்படும்...!

ஓணம் பண்டிகையையொட்டி, வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று வழக்கம் போல் இயங்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பழமையான வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, யானை உள்ளிட்ட விலங்களும், பல்வேறு வகையான பறவைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க : சென்னை, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

இந்த பூங்காவை பார்வையிடுவதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், ஓணம் பண்டிகையையொட்டி இன்று வண்டலூர் பூங்கா வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வாரந்தோறும் செவ்வாய் கிழமையன்று வண்டலூர் பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.