வந்தே பாரத் ரெயில் சேவை - பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்!

நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் சேவையை, கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்றைய தினம், பிரதமர் மோடி நெல்லை - சென்னை வந்தே பாரத் ரெயில் சேவை உள்ளிட்ட வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்நிலையில் வந்தே பாரத் ரயில் சேவையை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதம ர் நரேந்திர மோடிக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.  

இதையும் படிக்க : அதிமுக - பாஜக கூட்டணி குறித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படுமா?

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் சென்னை  - நெல்லை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவதால் பயண நேரம் தற்போது 8 மணி நேரத்திற்கு குறைவாக உள்ளதாகவும், இதன்மூலம் தென் தமிழக மக்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என  மக்கள் விரும்புவதாகவும், எனவே வந்தே பாரத் விரைவு ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குமாறும் தெரிவித்துள்ளார்.