தொடங்கியது ‘வந்தே பாரத் ரயில்’ முன்பதிவு...!

தொடங்கியது ‘வந்தே பாரத் ரயில்’ முன்பதிவு...!

Published on

சென்னை - கோவை இடையேயான 'வந்தே பாரத் ரயில்' நாளை தொடங்கப்படவுள்ள நிலையில், முன்பதிவு தொடங்கி உள்ளது.

தமிழ்நாட்டிற்கு நாளை வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த விமான முனைய கட்டிட திறப்பு விழா, ‘வந்தே பாரத்’ ரயில் தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் சென்னை - கோவை இடையேயான ‘வந்தே பாரத்’ ரயில் நாளை தொடங்கப்படவுள்ள நிலையில், முன்பதிவு தொடங்கி உள்ளது. இந்த ரயிலில் 6 மணி நேர பயணத்திற்கு ஆயிரத்து 57 ரூபாய் முதல் 2 ஆயிரத்து 310 வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com