நாளை நடைபெறவுள்ள வருமுன் காப்போம் திட்டம்… அமைச்சர் மா.சு தகவல்  

தமிழ்நாடு முழுவதும் நாளை 50 இடங்களிலும், சென்னையில் 2 இடங்களிலும் வருமுன் காப்போம் திட்டத்தின் முகாம் நடைபெறவுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நாளை நடைபெறவுள்ள வருமுன் காப்போம் திட்டம்… அமைச்சர் மா.சு தகவல்   

சென்னை விமான நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது வருமுன் காப்போம் திட்டம் ஆண்டுக்கு 1250 இடங்களில் நடைபெறும் என்று அறிவிக்கபப்ட்டது.  இந்த நிலையில் நாளை  தமிழகத்தில் 50 இடங்களிலும், சென்னையில் 2 இடங்களிலும் நாளை வருமுன் காப்போம் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.காலை 9 மணிக்கு தொடங்கும் நிகழ்வு 4 மணி வரை நடைபெறும் என்றார். மேலும், இந்த திட்டத்தின் முகாமில் 20க்கும் மேற்பட்ட மருத்துவ பிரிவில் நடைபெற உள்ளது.

மேலும், பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் அனைத்துப் பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு தொற்று பரவலை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் மாநகர பகுதிகளில் உள்ள குடிசைப் பகுதிகளில் மழைக்கால மருத்துவ சிறப்பு முகாம்கள் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் 25 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூடு போடாமல் இருப்பதாகவும், நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் மூலம்,  11 லட்சம் பேர்  இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதாக தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் இதுவரை 1777 மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 2247 வீர நபர்களுக்கும் 2.40 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கும், 4.68 லட்சம் பாலூட்டும் தாய்மார்களுக்கும் 3.92 லட்சம் கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் 7 மருத்துவக் கல்லூரிகளில் 850 இடங்களுக்கான ஒப்புதல் ஒன்றிய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. மேலும் 4 கல்லூரிகளில் 50 இடங்கள் வழங்க அனுமதி கோரப்பட்டுள்ளது, அதேபோல, நான்கு மருத்துவ கல்லூரிகளில் உள்ள சிறு கோளாறுகளை சரி செய்து அந்த ஆய்வறிக்கையும் மத்திய அரசிடம் வழங்கி இருப்பதாகவும் அதனை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு விரைவில் வரும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.