வேதா இல்ல வழக்கு : அ.தி.மு.கவினரின் மேல்முறையீடு தள்ளுபடி!

வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்தது செல்லும் என இரண்டு நீதிபதி கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
வேதா இல்ல வழக்கு : அ.தி.மு.கவினரின் மேல்முறையீடு தள்ளுபடி!
Published on
Updated on
1 min read

வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்தது செல்லும் என இரண்டு நீதிபதி கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை, அவரது நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. 

அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமனின் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, வேதா இல்லத்தை அரசுடமையாக்க நிலம் கையகப்படுத்திய அறிவிப்பு, அரசாணை ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டார். 

இந்நிலையில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மேலுமுறையீடு செய்ய அனுமதி அளிக்கக்கோரி, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் வழக்குக் தொடர்ந்தார். 

இந்த மனு 20ஆம் தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் அதிமுக சார்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.  தற்போது இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், சத்திகுமார் சுகுமார குரூப் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. 

அப்போது இரண்டாவது நினைவிடம் என்பது தேவையற்றது என்ற தனி நீதிபதி கருத்தில் தவறில்லை எனவும் பொது நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படவில்லை எனவும் அரசியல் காரணங்களுக்காகவே கையகப்படுத்தப்பட்டுள்ளதால் வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதிகள் கூறினர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com