வேதாரண்யம்: பரவலாக கனமழை.. உப்பு உற்பத்தி பாதிப்பு.. மீண்டு வர ஒரு வாரமாகும் - உற்பத்தியாளர்கள்

வேதாரண்யத்தில் பெய்த கனமழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

வேதாரண்யம்: பரவலாக கனமழை.. உப்பு உற்பத்தி பாதிப்பு.. மீண்டு வர ஒரு வாரமாகும் - உற்பத்தியாளர்கள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.

வேதாரண்யத்தில் பரவலாக கனமழை:

கடந்த ஒரு மாதமாக வெயில் தாக்கத்தால் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேதாரண்யம் பகுதியில் நேற்று இரவு முதல் அதிகாலை பரவலாக கனமழை பெய்தது.

உப்பு உற்பத்தி பாதிப்பு:

இதனால் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாத்திகளில் உள்ள உப்பை சேகரித்து தார்பாய்களை கொண்டு மூடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். உப்பு பாத்திகளில் உள்ள மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. மீண்டும் உற்பத்தி துவங்குவதற்கு ஒரு வார காலம் ஆகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.