சென்னையில் வரத்து குறைவால் உச்சம் தொட்ட காய்கறிகள் விலை: தக்காளி விலை கேட்டு தலைசுற்றும் இல்லத்தரசிகள்!!..

சென்னையில் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது இல்லத்தரசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் வரத்து குறைவால் உச்சம் தொட்ட காய்கறிகள் விலை: தக்காளி விலை கேட்டு தலைசுற்றும் இல்லத்தரசிகள்!!..

கனமழை காரணமாக, தமிழகம் மற்றும் ஆந்திராவில் காய்கறிகளின் விளைச்சல் கடும் பாதிப்பை சந்தித்தது. இதன் விளைவால், சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்து, அதன் விலை அதிகரித்துள்ளது. காய்கறிகளின் வரத்திற்கேற்ப அதன் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரு கிலோ தக்காளி விலை 140 ரூபாயாக உள்ளது.

வெங்காயம் விலை 40 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆனால் பீன்ஸ் வெண்டைக்காய்  போன்ற பச்சை காய்கறிகளின் விலை நேற்றை ஒப்பிடுகையில் இன்று குறைந்துள்ளதாக தெரிவிக்கும் வியாபாரிகள், தக்காளிகளின் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை மட்டும் அதிகரித்துள்ளதாகவும், வரத்தை பொறுத்து அதன் விலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

இதேபோன்று, புதுச்சேரியிலும் காய்கறி விலைகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதிலும் நேற்றுவரை 60 ரூபாய்க்கு விலை போன கத்திரிக்காய், 50 சதவீதம் உயர்ந்து 140 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.