வேலூர் : " நகர அரங்கம் புதுப்பித்து மக்கள் பயன்பாட்டுக்கு..." - ஆட்சியர்

வேலூர் : " நகர அரங்கம் புதுப்பித்து மக்கள் பயன்பாட்டுக்கு..." - ஆட்சியர்
Published on
Updated on
1 min read

வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழக அரசுக்கு சொந்தமான நகர அரங்கம் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இது மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் மூடப்பட்டிருந்தது. இதனால் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அதிகாரிகளுடன் இரண்டாவது முறையாக இன்று நகர அரங்கு மற்றும் பாழடைந்துள்ள சங்கீத சபாவை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசுக்கு சொந்தமான நகர அரங்கம் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனை புதுப்பிக்க அறிவுறுத்தியுள்ளோம். 

பின்னர் அது குறைந்த வாடகைக்கு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என்றும் வணிக நோக்கத்திற்கு இது பயன்படாது என்றும் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், இதே போல் சங்கீத சபா இடத்தில் சில ஆக்கிரமிப்புகள் உள்ளது. அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புதிய அரங்கு ஒன்று பெரியதாக கட்டபடும் என்றும் அது மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரத்திட்டமிட்டுள்ளோம் என்றும் குப்பைகள் கொட்டுவதை தடுப்பதுடன் இடத்தை முழுவதும் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடப்பதாகவும் கூறினார்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com