வேலூர் : சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளிடம் குறைதீர்வு கூட்டம்...!

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் 75 - வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளிடம் மாவட்ட ஆட்சியர் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேசிய கொடியினை வழங்கினார்.

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் காயிதே மில்லத் அரங்கில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் 75 - வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளிடம் குறைகள் கேட்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் பங்கேற்றனர்.

 இதில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளை, இந்த 75 - வது சுதந்திர தின பெருவிழாவை முன்னிட்டு அவர்களின் வீடுகளுக்கே சென்று கௌரவிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு தேசிய கொடியினை வழங்கினார். பின்னர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி, இந்த தியாகிகளின் வாரிசுகள் குறைதீர்வு கூட்டம் நடக்கிறது. யாராவது விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் வரும் ஆண்டில் இருந்து சிறப்பு செய்யபடும். மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகள், கல்வியில் குறைகள், முன்னுரிமை பெறுதல், போன்ற பரிந்துரைகள் வேண்டுமென்றால் உதவி செய்வோம்.என்றும் தொழில் செய்ய தியாகிகளின் வாரிகளுக்கு கடன் அளித்து குறைகளை போக்குவோம் என்றும் பேசியுள்ளார்.