வேங்கை வயல் பிரச்சனை- பாஜக வாய் திறக்கவில்லை - தொல். திருமாவளவன் காட்டம்

வேங்கை வயல் பிரச்சனை
வேங்கை வயல் பிரச்சனை குறித்து இதுவரை பாஜக வாய் திறக்கவில்லை. ஆறுதல் சொல்ல கூட தயாராக இல்லை. அவர்களது பாஷையில் பாதிப்புக்கு உள்ளானவர்கள் இந்துக்கள் தான். ஆனால் அமைதியாக பார்க்கிறார்கள், அவர்கள் தான் சாதியவாதிகள், சனாதனவாதிகள். இதனை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு சாதியவாதி என்ற முத்திரை குத்துவது திரிபுவாத முயற்சி
இரண்டு முறை போராட்டம் - கவன ஈர்ப்பு தீர்மானம்
வேங்கை வயல் விவகாரத்தில் இரண்டு முறை போராட்டம் நடத்தி இருக்கிறோம் .சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம். சிபிசிஐடி விசாரணையில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்; பொறுத்திருந்து பார்ப்போம். தமிழ்நாடு அரசு இதில் உறுதியாக இருந்து உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.
எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய யாரும் வேங்கை வயல் பற்றி பேசவில்லை. எந்த நோக்கத்திற்காக யாருக்கு அச்சப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. மனிதாபிமானம் என்கிற பார்வை இருக்கிறதா இல்லையா என்று ஐயப்படக்கூடிய வகையில் இருக்கிறது.
பட்டியல் சமூகத்தை சார்ந்த ராம்நாத் கோவிந்த், பழங்குடி சமூகத்தை சார்ந்த பெண்ணை குடியரசுத் தலைவராக அமர வைத்தோம் என்று பெருமை பேசுகிறார்கள். ஆனால் இந்தியா முழுவதும் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த இந்திய ஒன்றிய அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை; ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்று கண்காணிக்க இந்திய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு இருக்கிறது
மேலும் படிக்க | குடியரசு - இறையாண்மை - பி.ஆர். அம்பேத்கர்
வன்கொடுமை தடுப்பு சட்டம்
இந்தியா முழுவதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை 10 சதவிகிதம் பேர் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பது வெட்கக்கேடான ஒன்று. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தினால் மட்டுமே வன்கொடுமைகளை தடுக்க முடியும் என்று வேண்டுகோள் விடுகிறோம் என பேசினார்.
ரதி ராஜேந்திரன்
.