குடும்பத் தலைவிகளின் விவரங்கள் 6-ம் தேதி முதல் சரிபார்ப்பு!!

குடும்பத் தலைவிகளின் விவரங்கள் 6-ம் தேதி முதல் சரிபார்ப்பு!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில், குடும்பத் தலைவிகளின் விவரம் சரிபார்க்கும் பணி வருகின்ற 6ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான விண்ணப்பங்கள் பதிவேற்றும் பணி ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்டமாக நேற்று வரை தமிழகம் முழுவதும் சுமார் 75 லட்சம் விண்ணப்பங்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்காக ஏற்கனவே பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு ரூபாய் 7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு கோடி பேர் வரை மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில் கடந்த 24ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், பதிவு செய்யப்பட்டுள்ள குடும்பத் தலைவிகளின் விவரம் சரி பார்க்கின்ற பணியானது ஆறாம் தேதி முதல் இதற்கென உருவாக்கப்பட்டுள்ள சாஃப்ட்வேர் மூலமாக சரிபார்க்கப்படுகிறது.

விண்ணப்பங்கள் சரிபார்த்த பின்னர், தகுதியான மகளிர் இக்கட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர், இத்திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதி இல்லாத மகளிர் பதிவு செய்திருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் நிராகரிக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க || "பாஜக ஆட்சியில், தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடக்கவில்லை" அண்ணாமலை பெருமிதம்!!