அதிகாலையில் சோகம்... தன்னைத் தானே மாய்த்துக்கொண்ட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள்!!

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் அதிகாலை 3 மணி அளவில் தற்கொலை செய்து கொண்டார்

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா விஜய் ஆண்டனி (16) சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே, லாரா விஜய் மனா அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் டிடிகே சாலையில் உள்ள தனது வீட்டில், அறையின் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்த அவரது தந்தை, உதவியாளரின் உதவியோடு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். காவல் துறை இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.