விழுப்புரம் : " விதைகள் பற்றாக்குறையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் " - பாஜக விவசாய அணி

விவசாய இடுபொருட்கள், விதைகள் பற்றாக்குறையை போக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ; பாஜக விவசாய அணி கோரிக்கை

விழுப்புரம் : " விதைகள் பற்றாக்குறையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் " - பாஜக விவசாய அணி

விழுப்புரம் மாவட்ட பாஜக அலுவலகத்தில், நேற்று மாலை பாஜக விவசாய அணியின் மாநில பொதுச் செயலாளர் ரவிசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக, 7 தொகுதியில் உள்ள விவசாயிகளை சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கேட்டறிந்தோம். நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. விவசாய இடு பொருட்கள், விதைகள் பற்றாக்குறையாக உள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள திமுக நிர்வாகளை வெளியேற்ற வேண்டும். தளவானூர் தடுப்பணையை உடனடியாக கட்டித்தரவேண்டும். இவைகளை உடனே அரசு சரி செய்து விவசாயிகளை இன்னல்களை போக்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.