தமிழ்நாட்டில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல்...வரும் 10-ம் தேதி 1000 இடங்களில் முகாம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல்...வரும் 10-ம் தேதி 1000 இடங்களில் முகாம் அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக வேகமாக பரவிவரும் வைரஸ் காய்ச்சலால் சிறுவர்கள் முதல் 50 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் அண்மைக் காலமாக மர்ம காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை H3, N2 'இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்' என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், சுவாச கோளாறு ஏற்படுத்துவதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை பம்மல், ஆலந்தூர் மட்டுமல்லாமல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. 

பாதிப்பு உள்ளானவர்களுக்கு 7 நாட்கள் வரை காய்ச்சலும், பின்னர் 3 வாரங்கள் வரை கடுமையான சளி மற்றும் இருமலால் பாதிக்கப்படுகின்றனர். தொண்டையில் வலியும் இருப்பதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் முதல் 50 வயதுக்கு மேற்பட்ட முதியோர் வரை இந்த வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு அதிகமாக ஆளாவதாக கூறப்படுகிறது. 

கொதிக்க வைத்த குடிநீரை பருகுவதுடன், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் பயன்படுத்துவது பலன் தரும் என சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் இந்த காய்ச்சல் 'உயிர் கொல்லி நோய் அல்ல' என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

இதனிடையே, வரும் 10-ம் தேதி வெள்ளிக்கிழமை, மாநிலம் முழுவதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com