நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற தொண்டர்கள் கடுமையாக பாடுபட வேண்டும்....கே.பி.அன்பழகன் ..!

நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற தொண்டர்கள் கடுமையாக பாடுபட வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற தொண்டர்கள் கடுமையாக பாடுபட வேண்டும்....கே.பி.அன்பழகன் ..!

தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கம்பைநல்லூர், அரூர் பேரூராட்சி தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தருமபுரி மாவட்ட  செயலாளரும், பாலக்கோடு சட்டமன்ற  உறுப்பினர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

கடந்த சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணி 5 தொகுதிகளிலும் வெற்றிப் பெற்றது. தருமபுரி மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக உள்ளது என்றும் வரும் உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிப் பெற வேண்டும், கட்சித் தொண்டர்கள் வீடு, வீடாக சென்று வாக்குகளை சேகரிக்க வேண்டும், அனைவரும் அதிமுகவின் சாதனைகளை வீடு வீடாக எடுத்துக்கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும், அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையோடு பணியாற்றி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றார்.