தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் - விறுவிறுப்பாக தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் சென்னை கே.கே.நகரில் காலை முதல் விறுவிறுப்பாக தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் - விறுவிறுப்பாக தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் தற்போது பொறுப்பில் உள்ள நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவடைந்ததால் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், ஆர்.கே செல்வமணி தலைமையில் ஒரு அணியும் களமிறங்கியுள்ளது.

இரு அணிகள் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், கே. பாக்யராஜ் அணியில் அவர் தலைவராக போட்டியிட உள்ளார். செயலாளர் பதவிக்கு ஆர்.பார்த்திபன், பொருளாளர் பதவிக்கு வெங்கட்பிரபு போட்டியிடுகின்றனர். இந்த அணியில் துணைத் தலைவர் பதவிக்கு ஆர்.மாதேஷ், எஸ். எழில் இருவரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். 

இதேபோல் ஆர்கே செல்வமணி அணியில் தலைவராக அவர் போட்டியிடுகிறார். செயலாளராக ஆர்.வி.உதயகுமார், பொருளாளராக பேரரசு, இணை செயலாளராக சுந்தர்.சி, முருகதாஸ், லிங்குசாமி, செயற்குழு உறுப்பினராக ரமேஷ் கண்ணன், மனோஜ்குமார், மனோபாலா, உள்ளிட்ட 19 பேர் போட்டியிடுகின்றனர். வாக்குகள் இன்று மாலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com