வஃக்பு வாரிய தலைவர் வழக்கு... அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!!!

வஃக்பு வாரிய தலைவர் வழக்கு... அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!!!

அரசு பதவியை தவறாக பயன்படுத்தியதாக தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த நூர்முகமது என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி உத்தரவிட்டுள்ளது.  தமிழ்நாடு வக்ஃப்  வாரிய தலைவர் அப்துல் ரகுமான்  மெக்கா புனித பயணம் செல்வதாக கூறி அரசிடம் தடையில்லா சான்று பெற்று நேரடியாக மெக்காவுக்கு செல்லாமல் துபாய் சென்றதாக புகார் எழுந்தது.

திருச்சியில் அவர் கட்டிவரும் மருத்துவ கல்லூரிக்காக நிதி வசூல் செய்ய வேண்டியே துபாய் சென்றதாகவும் இது அரசு பதவியை தவறாக பயன்படுத்திய செயல் எனவும் குற்றச்சாட்டப்பட்டு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

டிரான்ஸிட் விசா மூலம அப்துல் ரகுமான் துபாய் வழியாக மெக்கா சென்றதாக வக்ஃப் வழக்கறிஞர் வாதம் செய்த நிலையில் மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு.

இதையும் படிக்க:    ஈரோடு இடைத்தேர்தல்... தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!!!