கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படும் நீர்.....

கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படும் நீர்.....

கொள்ளிடம் வழியாக சென்று கடலில் கலக்கும் தண்ணீரை ஏரி குளங்களில் நிரப்பாதது குறித்து எழுப்பட்ட கேள்விக்கு அவ்வாறு நிரப்பினால் மழை பெய்யும் போது வெள்ளம் ஏற்படும் என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

கொள்ளிடம் ஆற்றில் இரண்டு லட்சம் கன அடிக்கு மேல் நீர் வெளியேற்றப்படும் நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக்த்தில் மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தி அமைச்சரிடம், கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் வறண்டு கிடக்கும் ஏரி, குளங்களில் ஏன் நிரப்பவில்லை என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், இப்போது, ஏரி குளங்களில் தண்ணீர் நிரப்பி விட்டால், மழைக் காலத்தில் ஏரி, குளம் உள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் என்று விளக்கம் அளித்தார்.

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சிதம்பரம் அருகே மூன்று கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது.


கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.  மேட்டூரில் இருந்து 2 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பு வழியாக திருச்சி கல்லணை வந்தடைந்ததுள்ளது. அங்கிருந்து நேற்று முன்தினம் காலை முதல் தஞ்சை மாவட்டம், கீழணைக்கு தண்ணீர் வரத் துவங்கியுள்ளது.

இந்நிலையில் கீழணையில் இருந்து 20 ஆயிரம் கன அடியில் இருந்த தண்ணீர் படிப்படியாக வெளியேற்றப்பட்டு வரப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை கீழணையில் உள்ள 70 மதகுகளும் திறக்கப்பட்டு கொள்ளிடத்தில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.