தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை தீவிரம்: முக்கிய அணைகளின் நீர்மட்டம் உயர்வு...!

வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்  பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 81 புள்ளி 36 அடியாக உயர்ந்தது. நீரின் இருப்பு 16 புள்ளி 41 டி.எம்.சியாகவும்  அதிகரித்துள்ளது. 

இதையும் படிக்க : ராஜஸ்தான் : காங்கிரஸை பின்னுக்கு தள்ளிய பாஜக...!

இந்நிலையில், மற்றொரு அணையான கொடிவேரி அணையின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு  அணைகளிலும் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தின் முக்கிய அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே இரவில் 3 அடி உயர்ந்து 143 அடி கொள்ளளவில் 113 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் காரையாறு அணையின் நீர்மட்டமும் 3 அடிகள் உயர்ந்துள்ளது.