தொடர் மழை காரணமாக வேகமாக நிரம்பி வரும் தமிழகத்தில் நீர் நிலைகள்...

தொடர் மழை காரணமாக , தமிழகத்தில் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. 
தொடர் மழை காரணமாக  வேகமாக நிரம்பி வரும் தமிழகத்தில் நீர் நிலைகள்...
Published on
Updated on
1 min read

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், மேட்டூர் அணைக்கான நீர் வரத்தும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்றுவரை 11 ஆயிரத்து 772 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 15 ஆயிரத்து 740 கன அடியாக அதிகரித்துள்ளது. அதன்படி அணையின் நீர் மட்டமும்113 புள்ளி 59 அடியிலிருந்து 114 புள்ளி 46  அடியாக உயர்ந்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 84.91 டி.எம்.சியாக உள்ளது. இதனிடையே அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் வெளியேற்றத்தை காட்டிலும், வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆரணியாறு, கொசஸ்தலை ஆறுகளின் தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் வகையில் இருக்கும் இந்த காட்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com