அமராவதி அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு...
உடுமலை அமராவதி அணையில் இருந்து குடிநீருக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.

அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி நிச்சயம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில், அதிமுக பிரமுகர் கஜேந்திரன் வீட்டு திருமண விழாவில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம், அனைவரையும் ஒருங்கிணைத்து கழகத்தை மாபெரும் வெற்றிபெற செய்வேன் என்று திருமதி வி கே சசிகலா கூறி இருப்பதாக செய்தியாளர்கள் கேட்டபோது, இதைத்தான் நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க : பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல்...திருப்பூரில் பரபரப்பு!
தொடர்ந்து பேசிய அவர், சாதாரண தொண்டர்கள் கூட கழகத்தின் பதவிக்கு போட்டியிடலாம் என்ற விதியை மாற்றியிருப்பதாக கூறினார். எனவே, பழைய விதி தொடர்ந்தால் மட்டுமே, பொதுச்செயலாளர் பதவிக்கு தாம் போட்டியிடுவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு பேருந்துகளில் 3 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் இலவசமாக பயணிக்கும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என போக்குவரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு சட்ட சபையில் 3 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் கட்டணமில்லாமல் அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம் என சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.
இதையும் படிக்க : பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல்...திருப்பூரில் பரபரப்பு!
இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் 5-ம் தேதி முதல் குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் இனி வரும் நாட்களில் இலவசமாக பயணிக்கும் குழந்தைகளின் விவரங்களை போக்குவரத்து அறிக்கையில் பதிவு செய்திட வேண்டும் என உத்தரவிட்டுள்து.
தமிழ்நாட்டில் மத்திய அரசு உதவியோடு செயல்படுத்தப்படும் திட்டங்களை தங்களது திட்டங்களாக திமுக அரசு கூறி வருவதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா கூறியுள்ளார்.
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பாஜக மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜா, தல்லாகுளத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறியவர், ராகுல் காந்தி மீது பிரதமரோ மத்திய பாஜக அரசோ வழக்கு தொடரவில்லை என்று கூறினார்.
இதையும் படிக்க : பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல்...திருப்பூரில் பரபரப்பு!
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் மத்திய அரசு உதவியோடு செயல்படுத்தப்படும் திட்டங்களை தான் தங்களது திட்டங்களாக திமுக அரசு கூறி வருவதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா கூறியுள்ளார்.
அரசுப்பள்ளியில் 10 வயது முதல் 13 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு பல் பாிசோதனை செய்யும் திட்டம் மூலம் 4 லட்சம் மாணவா்கள் பயனடைவாா்கள் என அமைச்சா் மா.சுப்ரமணியன் பெருமிதம் தொிவித்துள்ளாா்.
சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அரசு பல்மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் 2017 - 2022 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற 86 இளங்கலை பல் மருத்துவ மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இதையும் படிக்க : அதிகாரத்திமிரின் உச்சம்! – கண்டனம் தெரிவித்துள்ள சீமான்
பின்னர் மேடையில் பேசிய அமைச்சர், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இருந்த மாணவ மாணவியர்களுக்கு பல் பரிசோதனை போன்ற பணிகளை நான் மேயராக இருந்த போது சென்னை பல் மருத்துவ கல்லூரி மூலம் செய்து இருக்கிறோம். அதே போல இப்போது தமிழகம் முழுவதும் உள்ள 10-13 வயது உள்ள அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு பல் மருத்துவ கல்லூரி மூலம் கடந்த 20 நாட்களுக்கு முன்பு இருந்து பல் பரிசோதனை செய்யும் திட்டத்தை முன்னெடுத்து இருக்கிறோம். இதன் வாயிலாக, சென்னையில் மட்டும் 54000 குழந்தைகளும் , மாநிலம் முழுவதும் 4 லட்சம் குழந்தைகளும் பயனடைவாா்கள் என குறிப்பிட்டுள்ளாா்.
ஆன்லைன் சூதாட்ட மசோதா ஆளுநா் அவரது படுக்கைக்கு கீழே வைத்து கொள்வதற்கு அல்ல என அமைச்சர் துரைமுருகன் கடுமையாக சாடியுள்ளார்.
வேலூரில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சா் துரை முருகன் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளா்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ராகுல் காந்தி மீதான பாஜக அரசின் நடவடிக்கை மத்திய அரசு ஒரு தனி மனிதனை பார்த்து பயப்படுகிறதோ என எண்ண தோன்றுகிறது என்று கருத்து தொிவித்துள்ளார்.
இதையும் படிக்க : அதிகாரத்திமிரின் உச்சம்! – கண்டனம் தெரிவித்துள்ள சீமான்
தொடர்ந்து பேசிய அவரிடம், ஆன்லைன் சூதாட்ட மசோதாவை ஆளுநர் இந்த முறையாவது நிறைவேற்றுவாரா என்று கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதிலளித்த அமைச்சர், ஆன்லைன் சூதாட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மிண்டும் அதை அவர் காலதாமதப்படுத்துவதற்கு வாய்ப்பில்லை என்று கூறியவர், ஆன்லைன் சூதாட்ட மசோதா ஆளுநா் அவரது படுக்கைக்கு கீழே வைத்து கொள்வதற்கு அல்ல; அதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என கடுமையாக சாடியுள்ளாா்.