தமிழுக்கு கள்ளிபாலா...ஒருநாளும் விடமாட்டோம்...பள்ளி அமைச்சர் பேச்சு!

தமிழுக்கு கள்ளிபாலா...ஒருநாளும் விடமாட்டோம்...பள்ளி அமைச்சர் பேச்சு!

எந்த மொழிக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது கிடையாது, அதனை திணிக்கும் போது நாங்கள் குரல் கொடுப்போம் என பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான பொதுக்கூட்டம்:

அரியலூர் பேருந்து நிலையம் அருகே மாவட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் தமிழக பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இதையும் படிக்க: காவிமயமாவதற்கு முன் காக்கிமயமான கடலூர்...!

நாங்கள் எதிர்க்கவில்லை; திணிக்கும் போது குரல் கொடுப்போம்:

பின்னர் கூட்டத்தில் பேசிய பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்தி உள்ளிட்ட எந்த மொழிக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், அதனை  திணிக்கும் போது குரல் கொடுப்போம் என்று கூறினார்.  

தமிழுக்கு கள்ளிபால் கொடுக்க விடமாட்டோம்:

மேலும் இந்திக்கு மட்டும் தாய்பால் கொடுப்போம், தமிழுக்கு கள்ளிபால் கொடுப்போம் என்றால் நாங்கள் விடமாட்டோம்; வந்தாரை வாழ வைப்பது தான் தமிழ்நாடு, ஆனால்  தனக்கு போகதான் தானமும், தர்மமும் என்று இந்தி திணிப்புக்கு எதிராக அமைச்சர் பேசினார்