இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடவில்லையா?...சூசகமாக கூறிய அண்ணாமலை!

இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடவில்லையா?...சூசகமாக கூறிய அண்ணாமலை!
Published on
Updated on
1 min read

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக கூட்டணியை எதிர்கொள்ளும் வகையில் பலம் வாய்ந்த வேட்பாளர் தேவையென்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

பலம் வாய்ந்த கட்சி அதிமுக தான் :

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கூட்டணிக்கு மரபு, தர்மம் உள்ளது என்றும், இடைதேர்தல்கள் கட்சியின் பலத்தை தீர்மானிப்பதற்கானது அல்ல எனவும் கூறியுள்ளார். மேலும் தங்கள் கூட்டணியில் பலம் வாய்ந்த கட்சி, பெரிய கட்சி அ.தி.மு.க தான் எனவும் தெரிவித்துள்ளார். 7 அமைச்சர்களுடன், திமுக அமைத்துள்ள பணிக் குழுவை பார்க்கும்போதே, எவ்வளவு பணம் செலவழிக்கப்படும் என்பது தெரிவதாகவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார். 

சந்தேகம் தான் :

இடைத்தேர்தலில் பண பலம், படை பலம், அதிகார பலத்தை எதிர்த்து நிற்க கூடிய  வேட்பாளருக்கு எல்லா விதமான ஒத்துழைப்பும் வழங்க வேண்டியது தமது கடமை எனவும் கூறியுள்ளார். எந்தவித குழப்பமும் இல்லை, தங்கள் கூட்டணியில் பெரிய கட்சியான  அ.தி.மு.க ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெறும் என தெரிவித்துள்ளார். மேலும், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பின்னால் அவருடைய கட்சியின் மாவட்ட தலைவரே நிற்பாரா என்பது சந்தேகம் தான் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com