மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் நீடித்த நிலைத்த வளர்ச்சியை திராவிட மாடல் நிர்வாகத்தின் மூலம் செயல்படுத்தவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காஞ்சிபுரம் மாவட்டம் செங்காடு ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதில் பெருமை கொள்வதாக கூறினார்.

கிராமங்களில் அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைக்க கிராம செயலகங்கள் உருவாக்கப்படும் என்று தெரிவித்த முதலமைச்சர், நீடித்த நிலைத்த வளர்ச்சியை திராவிட மாடல் நிர்வாகத்தின் மூலம் செயல்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.

மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற அரசு காத்திருப்பதாகவும், எல்லா ஊராட்சிகளுக்கும் தேவையான வசதிகளும்  செய்து தரப்படும் என  உறுதியளித்தார். கிராமங்களில் அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைக்க கிராம செயலகங்கள் உருவாக்கப்படும், எனவும் தனது உரையில் குறிப்பிட்டார்.