யாரையும் கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்பமாட்டோம்... அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி...

அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் யாரையும் கட்டாப்படுத்தி இலங்கை அனுப்பமாட்டோம், அவர்களின் ஒப்புதல் படியே செயல்படுவோம் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

யாரையும் கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்பமாட்டோம்... அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி...

சென்னை நந்தனத்தில் அலீப் மருத்துவ அறக்கட்டளையை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் தா.வேலு, தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதனை தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், முதலமைச்சர் தமிழகத்தில் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரணாக இருந்தார். 100 ஆண்டுகளாக  முன்னோர்கள் எண்ணிய திட்டத்தை 100 நாட்களில் முதலமைச்சர் செயல்படுத்தியுள்ளார்.  கலைஞர் வருமுன் காப்போம் என்ற திட்டத்தை தொடங்கி ஏழை மக்களின் உயிர்களை காப்பாற்றினார். அதேபோல் கலைஞரின் வழியில் மக்களை தேடி மருத்துவம் எனும் திட்டத்தை தொடங்கி வீடி தேடி மக்களுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது என பேசினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், சட்டமன்றத்தில் முதல்வர் 110ன் விதியின் கீழ் இலங்கை வாழ் தமிழர்கள் தமிழகத்தில்  108 முகாம்களில் வசித்து வருகின்றனர். 2 முகாம்கள் காவல்துறை கட்டுபாட்டில் உள்ளது. மற்ற 106 முகாம்களில் 12 முகாம்களுக்கு சென்று நான் ஆய்வு செய்த போது, அந்த ஆய்வின் அறிக்கையின் படி முதல்வர் கலைஞரின் திட்டம் தொடரவேண்டும் என்று 317 கோடி ரூபாய் செலவில் அவர்களுக்கு உணவு, உடை  உள்ளிட்ட அடிப்படை வசதிகள்  மற்றும் புதிதாக வீடுகள் கட்டி தரக்கூடிய திட்டம், கல்வி திட்டம், படித்தவர்களுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தரும் நிலையை உருவாக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் வகுக்கபட்டு அவை செயல்படுத்தபட்டு தொடர்ந்து அரசின் உத்தரவுகளை நிறைவேற்றபட்டு வருகிறது.

18 அரசாணைகளை முதல்வர் போட்டுள்ளார். தற்போது கூட 3 அரசாணைகளுக்கு நான் கையொப்பமிட்டு வந்துள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து, இலங்கை வாழ் தமிழர்களுக்கு சிலிண்டர் வழங்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். அமைச்சர் என்ற முறையில் நாங்கள் எப்போது இலங்கை  தமிழர்களை காப்பவர்களாக இருப்போம். யாரையும் கட்டாயபடுத்தி இலங்கை அனுப்பமாட்டோம், அவர்களின் ஒப்புதல் படியே செயல்படுவோம் என்று கூறினார்.