கொட்டும் மழையிலும் அதிமுக கூட்டணியில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் - எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசை கண்டித்து சொத்து வரி, தொழில் வரி, பால் கட்டண விலைஉயர்வு என திமுக அரசின் விலை உயர்வுகளை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் உரையாற்றினார்

கொட்டும் மழையிலும் அதிமுக கூட்டணியில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் - எடப்பாடி பழனிசாமி

40 தொகுதியும் வெற்றி

அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் யாரும் கலையாமல் அப்படியே நின்று கொண்டிருந்தனர் இதனை அடுத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியும் வெற்றி பெற வேண்டும் என்றும் நமது ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சியில் முடக்கிவிடப்படுகிறது என்றும் கூட்ரோடு பகுதியில் உள்ள கால்நடை பூங்கா இருபது மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது என்றும் பொங்கல் அன்று தரப்படும் கரும்பு மற்றும் இதர பொருட்களை தரமாக தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் மேலும் நமது அதிமுக ஆட்சி சேலம் மாவட்டத்திற்கு என பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளோம்.

ஆனால் தற்பொழுது திமுக ஆட்சியில் எந்த ஒரு திட்டங்களும் அறிவிக்கவில்லை என்றும் எடுத்துக் கூறினார் மேலும் நாளை அமைச்சராக பதவி ஏற்கும் உதயநிதி ஸ்டாலின் பல சாதனைகளை செய்து வரவில்லை குடும்ப ஆட்சி நடைபெறுகிறது.

மேலும் படிக்க : குடும்ப கட்சி ஆட்சி செய்கிறது - உதயநிதி அமைச்சரானால் தமிழ்நாட்டில் தேனாறும் பாலறுமா பாயும்?

திமுகவுக்கு மக்கள் சம்மட்டி அடி

பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த திமுக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுப்பார்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெறும். தமிழகத்தில் விலைவாசி உயர்ந்து விட்டதாக தமிழக நிதி அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளார். விலைவாசியின் காரணமாக அனைத்துப் பொருட்களும் விலை உயர்ந்து மக்கள் வாங்கும் சக்தியை இழந்து விட்டனர். மக்களின் பரிதாப நிலையை உணர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டு மக்களை பார்ப்பதை கைவிட்டு நாட்டு மக்களை பார்க்க வேண்டும்.

 

மேலும் படிக்க : கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து வழக்கு...! விசாரணையில் வந்த தீர்ப்பு என்ன..?

கொலை, கொள்ளை, வழிப்பறி

தமிழகத்தில சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. நாள்தோறும் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம், இலவச மடிக்கணினி, இருசக்கர வாகனம் போன்ற அதிமுக அரசின் திட்டங்கள் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால், அரசுப்பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ-மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2017-ம் ஆண்டு அரசுப்பள்ளியில் பயின்ற 9 பேர் மட்டுமே மருத்துவக் கல்வி வாய்ப்பை பெற்ற நிலையில், அதிமுக அரசு கொண்டு வந்த 7.5  சதவீத உள் இட ஒதுக்கீடு காரணமாக நடப்பாண்டில் அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 564 பேர் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.