
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ராமநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோவிலுக்கு நாள்தோறும் வெளி மாநில மற்றும் மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில், இன்று வார இறுதி விடுமுறை நாளையொட்டி, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராட குவிந்தனர். இதனையடுத்து ஆலயத்திலுள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் நின்று புனித நீராடிய பக்தர்கள் ராமநாதசுவாமியை தரிசனம் செய்தனர்.