எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன அலர்ட்...?

எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன அலர்ட்...?

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர புயலான மாண்டஸ் வலுவிழந்து நள்ளிரவு 3 மணி அளவில் கரையைக் கடந்தது. கரையை கடந்த புயல், வட தமிழகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக, மாமல்லபுரத்திலிருந்து வடமேற்கே சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னைக்கு மேற்கே 50 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. மேலும் புயலானது இன்று மாலை மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு நிற அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி, ஈரோடு, சேலம், சென்னை விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் நிற அலர்டும் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : மாண்டஸ் புயலால் உயிரிழப்புகள் ஏற்பட்டதா...?  பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் விளக்கம்