வெள்ளை அறிக்கை வெளியிட்ட காரணம் என்ன..? முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு...

கொடுத்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்கதான் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

வெள்ளை அறிக்கை வெளியிட்ட காரணம் என்ன..? முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு...

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் உள்ளாட்சித்தேர்தல் குறித்த ஆலோசனைக்கூட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமை வகித்தார். தென்காசி ஒன்றிய செயலாளர் சங்கரபாண்டியன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ., ராஜலட்சுமி, ஆலங்குளம் எம்.எல். ஏ, மனோஜ்பாண்டியன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் எம்.எல்.ஏ.வுமான கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேர்தல் பணி குறித்து ஆலோசனைகளை வழங்கி பேசினர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பேசுகையில் மகளிருக்கு ஊக்கத்தொகை இன்னும் தரப்பட்படவில்லை எந்த மானியங்களும் வழங்கப்படவில்லை .10 ஆண்டுகளாக அதிமுக அரசு தாக்கல் செய்து விவாதித்த பொருளைத்தான் தான் திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுகிறது.

கொடுத்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்க தான் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. தாலிக்கு தங்கம் , மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் மடிக்கணினி கிராமப்புற மக்களின்பொருளாதார மேம்பாட்டிற்காக கறவை மாடுகள் ஆடுகள் வழங்கியது அதிமுக அரசு எனவும் கூறினார். மேலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்த தென்காசி தொகுதியில் அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி பெறும் எனவும் கூறினார்.