உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட நீட் தேர்வின் ரகசியம் என்ன?!!

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட நீட் தேர்வின் ரகசியம் என்ன?!!

அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வு குறித்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார். 

மருத்துவக் கல்லூரி:

அரியலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி 347 கோடி நிதி ரூபாய் மதிப்பீட்டில், 26 ஏக்கர் பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்டது. இதனை கடந்த ஜனவரி மாதம், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருந்தார்.  இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.   ஐந்து தளங்களுடன், 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்ட மருத்துவமனையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். 

நீட் ரகசியம்:

இதனையடுத்து பல்வேறு துறைகளின் சார்பில் 2 ஆயிரத்து, 539 பயனாளிகளுக்கு 13 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.  நிகழ்ச்சியில் பேசிய அவர், நீட் தேர்வை ரத்து செய்யும் வரை திமுகவின்  சட்டப் போராட்டம் தொடரும் என்று பிரதமரிடம் கூறிவிட்டு வந்துள்ளேன் எனவும் இதுவே நீட் தேர்வின் ரகசியம் என்று கூறினார். 

அனிதா அரங்கம்:

இதனைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்திற்கு நீட் தேர்வை எதிர்த்து உயிர் நீத்த அனிதா நினைவரங்கம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இந்த அரங்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். 

இதையும் படிக்க:  சென்னை வெள்ள இடர் குழு அறிக்கை... பலன் என்ன?!!