தடுப்பூசி செலுத்தும்போது, செவிலியர்கள் மிகைப்படுத்தி எதையும் கூற வேண்டாம்.... அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தடுப்பூசி செலுத்தும்போது, செவிலியர்கள் மிகைப்படுத்தி எதையும் கூற வேண்டாம்.... அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on
Updated on
1 min read

கொரோனா தடுப்பூசி செலுத்தும்போது, செவிலியர்கள் மிகைப்படுத்தி எதையும் கூற வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தடுப்பூசி செலுத்த வரும் பொதுமக்களிடம், செவிலியர்கள், அசைவ உணவு சாப்பிடக் கூடாது, மது அருந்துவவோ, புகைப் பிடிக்கவோ கூடாது என்பது குறித்து எந்த கருத்தையும் மிகைப் படுத்தி கூற வேண்டாம் என்றும், இது குறித்து அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

எனவே செவிலியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்து மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்றும் மா. சுப்பிரமணியன் அறிவுறுத்தினார். அத்துடன் சென்னையில் மழை நீர் பாதித்த பகுதிகளில் வீடுகளுக்கே சென்று மருத்துவ வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். .

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com