மோடியை வெற்றி பெறக்கூடிய ஒரே தலைவர் ராகுல் காந்தி தான்...காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்

அகில இந்திய அளவில் மோடியை வெற்றி பெறக்கூடிய ஒரே தலைவர் ராகுல் காந்தி தான், மோடியின் பலமும்,பலவீனமும் ராகுல் காந்திக்கு தெரியும் என காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

மோடியை வெற்றி பெறக்கூடிய ஒரே தலைவர் ராகுல் காந்தி தான்...காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கூறுகையில்,  

ராகுல் காந்திக்கு மோடியின் பலமும் தெரியும், பலவீனமும் தெரியும்.அகில இந்திய அளவில் மோடியை சமாளிக்க கூடிய,மோடியை வெற்றி பெறக்கூடிய ஒரே தலைவராக ராகுல் காந்தி தான்  இருக்கிறார். அதை காலம் விரைவில் நிரூபிக்கும் என்றும் புதிதாக யாரிடமும் சென்று பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ராகுல் காந்திக்கு இல்லை என கூறினார்.

அரசியல் சட்டத்தின் படி ஆளுநர்களுக்கு சில எல்லைகள் உண்டு, அதன்படி செயல்படுவது தான் சரியானது. கடந்த காலங்களில் ஆளுநர்கள் அவ்வாறு தான் செயல்பட்டார்கள்.ஆனால் மோடி அரசு வந்த பின்பு ஆளுநர்களை பயன்படுத்தி  மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு சில தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருகிறது என கூறிய அவர்,

தமிழ்நாட்டிற்கு புதிதாக வந்துள்ள  ஆளுநர் தன் எல்லைகளை உணர்ந்து செயல்படுவார் என எதுர்பார்க்கிறோம் அப்படி செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.அப்படி செயல்பட்டால் தான் அவருக்கும் நல்லது என தெரிவித்தார்.