கள்ளச்சாராயம் தயாரிக்க வெல்லம் விற்பனை செய்வது யார்? நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை டி.ஜி.பி உத்தரவு...

கள்ளச் சாராயம் தயாரிக்க தரம் தாழ்ந்த வெல்லத்தை விற்பனை செய்யும் வியாபாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க  மதுவிலக்குதுறையினருக்கு அமலாக்கத்துறை டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கள்ளச்சாராயம் தயாரிக்க வெல்லம் விற்பனை செய்வது  யார்? நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை டி.ஜி.பி உத்தரவு...
Published on
Updated on
1 min read

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருவதால்  டாஸ்மாக்-கள் முழுவதும் மூடப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் பலர் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பது கள்ளச் சாராயம் காய்ச்சுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 15 நாட்களில் மட்டும் தடைசெய்யப்பட்ட கள்ளச் சாராயம் விற்பனை செய்ததற்காக 232 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து கைதானவர்களிரம் நடத்தப்பட்ட விசாரணையில் தரம் தாழ்ந்த வெல்லத்தை கள்ளச்சாராயம் தயாரிக்க சில வியாபாரிகள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டுள்ள நிலையில்  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com