யார் ஆளுநராக வந்தாலும் ஆட்சியை கலைக்க முடியாது... தொல். திருமாவளவன் பேட்டி...

யாரை ஆளுநராக கொண்டு வந்தாலும் அவர்களுக்கு தமிழ்நாட்டின் ஆட்சியை கலைத்து விடும் தெம்பும், திராணியும் கிடையாது என்று தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

யார் ஆளுநராக வந்தாலும் ஆட்சியை கலைக்க முடியாது... தொல். திருமாவளவன் பேட்டி...

சென்னை அசோக்நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் மறைந்த இம்மானுவேல் சேகரின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப் பட்டது, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இமானுவேல் சேகரன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர்,

ஆதிதிராவிட பழங்குடி நலத்துறை ஆணையம் உருவாக்கியதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் இந்த ஆணையத்தின் தலைவர் நியமிப்பதில் ஒய்வு பெற்ற நீதிபதி ஒருவரை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது அதில் சிக்கல் இருக்கிறது எனவும்
தலித் சமூகம் அல்லாத ஒருவரை நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

புதிய ஆளுநர் நியமிப்பில் காங்கிரஸ் கட்சியின் ஐய்யம் சரியானது. உளவுத்துறையோடு சுலபமான உறவு உள்ள ஒருவரை தமிழக ஆளுநராக வேண்டுமென்றே ஒன்றிய அரசு நியமித்துள்ளது.  ஜனநாயக பூர்வமாக செயல்படக் கூடிய ஒருவரை நியமிக்க வேண்டும்.

யாரை ஆளுநராக கொண்டு வந்தாலும் அவர்களுக்கு தமிழ்நாட்டின் ஆட்சியை கலைத்து விடும் தெம்பும், திராணியும் கிடையாது. சிஏஏ சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது வரவேற்புக்குறியது.

பெண்களுக்கு எதிராக நடக்க கூடிய பாலியல் வன்முறையில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும், இதற்கென தனி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த அவர்,  மத்திய அரசு பெண்களை பாதுகாக்க ஏற்கனவே அமைக்கப்பட்ட நிர்பயா என்கிற சட்டம் செயல்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

மேலும் இரண்டு வருடங்களில் தமிழகத்தில் போதை பழக்கம் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் முதல்வர் இதற்கு தனி கவனம் செலுத்தி இதற்கென்று தனி பிரிவினை உருவாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.