சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு ஏன் ரூ.79 லட்சம் அபராதம் விதிக்கக்கூடாது? - விளக்கம் கேட்டு மாநில தகவல் ஆணையம் நோட்டீஸ்!

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு ஏன் 79 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு மாநில தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு ஏன் ரூ.79 லட்சம் அபராதம் விதிக்கக்கூடாது? - விளக்கம் கேட்டு மாநில தகவல் ஆணையம் நோட்டீஸ்!
Published on
Updated on
1 min read

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில் 14 அடுக்கு வணிக வளாக கட்டிடம் கட்ட CMDA அனுமதியளித்தை தொடர்ந்து தற்போது கட்டட பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் துவங்கும் போதே கட்டடம் கட்டும் விவரத்துடன் கூடிய தகவல்களை மாணவர்கள், பெற்றோர்கள் அறியும் வகையில்  முன்னெச்சரிக்கை பதாகை வைப்பதை  உறுதிப்படுத்த தவறியதற்காக அப்பள்ளிக்கு மாநில தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பதாகை வைக்காத நிலையில் கட்டடம் கட்ட அனுமதியளித்ததற்காக சிஎம்டிஏ நிர்வாகத்துக்கு ஏன் அபராதம் விதிக்க கூடாது என மாநில தகவல் ஆணையம் நோட்டீசில் கேள்வி எழுப்பியுள்ளது. 

7 ஆயிரத்து 900 மாணவர்கள் பயிலும் பள்ளியில் பதாகை வைக்காததால்  ஒவ்வொரு மாணவருக்கும் பாதிப்புகள் ஏற்ப்படக்கூடும் என்ற அடிப்படையில் ஒவ்வொரு மாணவருக்கும் ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் 79 லட்சம் ரூபாயை அபராதத் தொகையாக கணக்கீடு செய்து மாநில தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பள்ளி வளாகத்தில் கட்டடம் கட்டப்படுவதால் ஏற்படும் விளைவுகளை மாணவர்களுக்கு பள்ளி  நிர்வாகம் முறையாக தெரிவிக்க வேண்டும் என்றும் மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com