அதிமுக வெளிநடப்பு செய்தது ஏன்? - இபிஎஸ் விளக்கம்

பாஜக கூட்டணியில் இருந்து விலகி விட்டதால் திமுகவிற்கு தங்கள் மீது பயம் வந்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இஸ்லாமிய கைதிகள் விடுதலை தொடர்பான முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதில் தர அனுமதிக்காததால் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக விளக்கம் அளித்தார். இஸ்லாமியர்கள் குறித்து அதிமுக பேசினால் முதலமைச்சருக்கு எரிச்சல், கோவம் வருவது ஏன் எனவும் இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.  

இதையும் படிக்க : இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்ய சிறப்புத் தீர்மானம்...வெளிநடப்பு செய்த அதிமுகவினர்!

பாஜக கூட்டணியில்  இருந்து அதிமுக விலகி விட்டதால் தி.மு.க.விற்கு தங்கள் மீது பயம் வந்து விட்டது எனவும் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டார். இந்தியா கூட்டணியில் 26 கட்சிகள் ஒன்றிணைந்து இருப்பதாகவும், அவர்கள்  அனைவருக்கும் ஒரே கொள்கையா?  எனவும் இபிஎஸ் வினவினார்.