தொற்று அதிகரித்தது ஏன்..? ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அமைச்சர் உத்தரவு...

கொரொனா தொற்று சில மாவட்டங்களில் அதிகரித்துள்ள நிலையில் ஏன் தொற்று அதிகரித்துள்ளது என்ற காரணத்தை கண்டறிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.  சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தொற்று அதிகரித்தது ஏன்..? ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அமைச்சர் உத்தரவு...
உலக கல்லீரல் அழற்சி தினந்தையொட்டி சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில்  கருவில் உள்ள குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை பரிசோதனையை  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். இதில் அமைச்சர் சேகர் பாபு, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.  
 
இந்த விழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளி கிராமத்தில்  5 ஆம் தேதி மக்களை தேடி மருத்துவம் திட்டம் துவங்க உள்ளதாகவும் இந்த திட்டம்  மூலம் பழங்குடியினர் நிச்சயம் பயனடைவார்கள் என்றார். கிருஷ்ணகிரி வனப்பகுதியில் உள்ளவர்களுக்கு முதல்வர் ஆம்புலனஸ் சேவையை துவக்க உள்ளார் என்றும் கடைகோடி மனிதனுக்கும் மருத்துவத்தை கொண்டு சேர்க்கும் திட்டம்,' மக்களை தேடி மருத்துவம்' திட்டம் என்றும் அப்போது தெரிவித்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய  அமைச்சர் மா.சுப்பிரமணியன், 
 
இன்று கருவில் உள்ள குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை பரிசோதனையை துவக்கி வைத்ததாகவும், மருத்துவத்து துறையில் முன்கள பணியாளர்களுக்கும் இன்று மஞ்சக்காமாலை தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.  தமிழகத்தை பொறுத்தவரை நேற்று  தொற்று எண்ணிக்கை 103 என்ற எண்ணிக்கையில்  அதிகரித்துள்ளதாகவும், சென்னை, கன்னியாகுமரி கோவை, ஈரோடு போன்ற மாவட்டத்தில் உயர்ந்துள்ளதால் இதற்கான கரணங்கள் கண்டறிய வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். கேரளாவில் பெரியளவு தொற்று அதிகரித்தற்கு வீடுகளில் தங்கி சிகிச்சை பெருவது தான் காரணம் என்றவர் தமிழகத்தில் தொற்று பாதித்தவர்களை  உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.
 
பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடைபிடிக்க வேண்டும் என்றவர்,  முககவசம் அணிவதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றார். பொதுமக்கள் தொற்று முடிவுக்கு வந்துவிட்டது, இனி யாரையும் எதுவும் செய்யாது என இருக்க கூடாது என்றவர்,   தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் சென்னை கலைவாணர் அரங்கில்  நாளை விழிப்புணர்வு நிகழ்வை முதல்வர் துவக்கி வைப்பதாக தெரிவித்தார்.
 
 தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓ.பி.சி இடஒதுக்கீடு நிச்சயம்  பயனளிக்கும் என அப்போது தெரிவித்தார். அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்வதை தொடர்ந்து வருகிறோம் என்றவர் கேரளாவில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அங்கிருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை அவசியமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். தற்போது கொரோனா தொற்று சற்று அதிகரித்து வரும் சூழல்  இருப்பதால், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான கால நீட்டிப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார் எனவும்  அப்போது கூறினார்.