தமிழ்நாட்டில் பரவலான மழை... மகிழ்ச்சியில் பொதுமக்கள்... கவலையில் விவசாயிகள்!!!

தமிழ்நாட்டில் பரவலான மழை... மகிழ்ச்சியில் பொதுமக்கள்... கவலையில் விவசாயிகள்!!!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று காலை தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.  இதனால், வெப்பம் தணிந்து சற்று குளுமையான சூழ்நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  அதே நேரத்தில், சம்பா அறுவடை பணி தொடங்கியுள்ள நேரத்தில், மழை பெய்ய தொடங்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அதேபோல், நாகை மாவட்டம் உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.  இதையடுத்து நெல் மூட்டைகளை தார்ப்பாய் கொண்டு மூடும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும், நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள திறந்தவெளி நேரடி கொள்முதல் நிலையங்களை, நிரந்தர கட்டிடமாக கட்டி தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிக்க:   ரூ.1155 கோடி மதிப்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்..!!