அதிமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ஓபிஎஸ் சிறப்பாக செயல்பட்டார் என்றால் ....அதிமுகவினரே ஏற்றுக்கொள்வார்களா? - பி.டி.ஆர்.

அதிமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ஓபிஎஸ் சிறப்பாக செயல்பட்டார் என்றால் ....அதிமுகவினரே  ஏற்றுக்கொள்வார்களா?  - பி.டி.ஆர்.
Published on
Updated on
1 min read

அதிமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ஓபிஎஸ் சிறப்பாக செயல்பட்டார் என்பதை அதிமுகவினரே  ஏற்றுக்கொள்வார்களா? என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பினார். 
மேலும் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான இறுதிப்பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்றைய மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறையை குறைக்க செயல்திட்டம் தீட்டியதை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது என அதிமுக உறுப்பினர் செந்தில்குமார் பேசினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக ஆட்சியில் 7 ஆண்டுகளில் ஒரு ஆண்டாவது 1 ரூபாய் தொகையாவது வருவாயில் சேமித்ததாக காண்பிக்கட்டும் எனவும் ஆதாரமற்ற முறையில் பேச கூடாது என்றும் தமிழகத்தின் நிதி பற்றாக்குறை குறித்து வெள்ளை அறிக்கை அளித்துள்ளதாகவும் கூறினார். 

மேலும் அவர், 2006ம் ஆண்டு திமுக பொறுப்பேற்ற போது தமிழகத்தில் ஆண்டுக்கு 5ஆயிரம் கோடி இருந்த முதலீட்டை, 2011ம் ஆண்டு ஆட்சி முடியும் பொழுது 13ஆயிரம் கோடி உயர்த்தப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் 1 % கூட முதலீட்டை உயர்த்தவில்லை என்றார்.  

தொடர்ந்து, 2003 முதல் 2016 வரை இருந்த திமுக, அதிமுக ஆட்சியில் உற்பத்தி முதலீடு சிறப்பாக இருந்தது. அதிமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ஓபிஎஸ் சிறப்பாக செயல்பட்டார் என்பதை அதிமுகவினரே ஏற்றுக்கொள்வார்களா? என விளக்கமளித்து, நிதியமைச்சர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அதிமுக கொறடா எஸ் பி வேலுமணி, "முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வழிகாட்டுதல் படி தான் செயல்பட்டனர். நீங்களும் முதலமைச்சரின் வழிகாட்டுதல் இல்லாமல் தனிப்பட்ட முறையில் சிறப்பாக செயல்பட்டதாக எடுத்துக்கொள்ளலாமா?",  என எதிர் கேள்வி எழுப்பினார்.

அதனையடுத்து, வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டும் தற்போது வரை பணியிடங்களை நிரப்ப தாமதமாகி உள்ளதையும் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான இறுதிப்பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com