ஆதிதிராவிட பள்ளிகளை பள்ளி கல்விதுறையின் கீழ் இணைத்தால்....மீண்டும் சாதியபாகுபாடுகள் அதிகரித்துவிடும் .!-பூவை ஜெகன் மூர்த்தி

ஆதிதிராவிட பள்ளிகளை பள்ளி கல்விதுறையின் கீழ் இணைத்தால்....மீண்டும் சாதியபாகுபாடுகள் அதிகரித்துவிடும் .!-பூவை ஜெகன் மூர்த்தி

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதிதிராவிட நலப் பள்ளிகளும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. 

இந்நிலையில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக கட்சியின் தலைவர் பூவை ஜகன் மூர்த்தி தலைமையில் சென்னையில் உள்ள கலெக்டர் அலுவலகம் வரையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் 100 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் ஆதி திராவிட நலப் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்க தமிழக அரசு மேற்கொள்ளும் சமூக நீதி நடவடிக்கையை திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக தங்களுடைய கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜகன் மூர்த்தி, ஆதிதிராவிட பள்ளிகளானது ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கிவரும் நிலையில், பள்ளி கல்வி துறையின் கீழ் ஏன் மாற்ற வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். மேலும் ஆதிதிராவிட பள்ளிகளை பள்ளி கல்விதுறையின் கீழ் இணைத்தால் மீண்டும் சாதியபாகுபாடுகள் அதிகரித்துவிடும் எனவும் குற்றச்சாட்டினார். 

மேலும் ஆதி திராவிட நலத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் அவரவர்கள் பணியை சரியாக ஆற்றுவதில்லை  என்றும் அவர்களின்  மெத்தனபோக்கே ஆதிதிராவிட நல பள்ளியின் தரம் குறைந்ததற்கு காரணம் என்றும்  குற்றச்சாட்டி உள்ளார்.

 இதையும் படிக்க | மதம் மாறியவர்களுக்கும் சலுகைகள் கிடைக்க வேண்டும்...ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட முதலமைச்சரின் தனி தீர்மானம்!