
அதிமுக ஆட்சியில் மேட்டூர் அணையை தூர்வாரியது போல் வைகை அணையை தூர்வார தற்போதைய திமுக அரசு முன்வருமா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூர் அணையை தூர்வாரி அதன் மூலம் கிடைத்த வண்டல் மண்ணை சிறுகுறு விவசாயிகளுக்கு முன்னாள் முதலைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கியதை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு,
தற்போது வைகை அணையை தூர்வார நடவடிக்கை மேற்கொண்டு அதன் மூலம் கிடைக்கும் வண்டல் மண்ணை கொண்டு வருவாய் ஈட்டுவது ஒரு புறம் இருந்தாலும், அதனை ஏழை எளிய விவசாயிகள் பயன் பெறும் வகையில் வண்டல் மண்ணை இலவசமாக வழங்க தற்போதைய திமுக தலைமையிலான தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள முன்வருமா என கேள்வி எழுப்பியுள்ளார்.